உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய கிராம மக்கள்...!

Tamil nadu Death Salem
By Thahir Apr 08, 2023 09:01 AM GMT
Report

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி அவரை ஆயிரக்கணக்கான மக்கள் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு நடத்தினர்.

சவ வேடிக்கை திருவிழா 

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்,காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கிராம மக்கள் உடல் நலத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று வேண்டி சவ வேடிக்கை திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஒருவர் இறந்த உடன் பாடை கட்டி இடுகாட்டு வரைக்கும் கொண்டு சென்று இறுதி சடங்கு நடத்தும் முறை அனைத்தும் விழாகவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டிய மக்கள் 

சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ஜெயம் மணி என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குணம் அடைந்தால் உயிரோடு இருக்கும் போதே இறுதிச் சடங்கு செய்து நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டியுள்ளார்.

அதன்படி அவர் குணமடைந்ததால் 7வது ஆண்டாக சவ வேடிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினார். பிணமாக வேடம் அணிந்த ஜெயமணிக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள்,கிராம மக்கள் சடங்குகளை செய்தனர்.

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய கிராம மக்கள்...! | A Funeral For A Living Person

அப்போது பெண்கள் ஒப்பாரி வைக்க உறவினர்கள் பாடை கட்டி நடனமாடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சவ வேடிக்கை வேண்டுதலில் முதலில் ஒருவர் இறந்த உடன் செய்யும் சடங்குகளுடன் தொடங்குகிறது.

பாடை கட்டி, தேர் கட்டி, கோவிலில் வழிபாடு நடத்திய உடன் பட்டாசு வெடித்தவாறு வீதி வீதியாக இறுதி ஊர்வலம் நடத்தப்படுகிறது.

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி இடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய கிராம மக்கள்...! | A Funeral For A Living Person

இடுகாட்டிற்கு சென்ற உடன் கோழிகளை பலியிட்டு புதைத்துவிட்டு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.

மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும், நோய்கள் குணமடையவும், திருமணம் நடக்க, குழந்தை பேறு கிடைக்க, குடும்ப சண்டைகள் நீங்க அம்மனை வேண்டி கொண்டு இந்த திருவிழாவில் மக்கள் பங்கேற்கின்றனர்.