திடீரென எமன் அவதாரம் எடுத்த காவிரி..நபருக்கு நேர்ந்த விபரீதம்- நடந்தது என்ன?

Tamil nadu Kumbakonam Death
By Vidhya Senthil Oct 07, 2024 01:26 PM GMT
Report

காவிரி ஆற்றில் குளிக்கச்சென்றவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை 

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார் . இந்த நிலையில் நேற்று (அக்.06) கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

river

அதன்பிறகு காவேரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மனைவி செய்த செயல்; நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த கணவன் - நடந்த கொடூரம்!

மனைவி செய்த செயல்; நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த கணவன் - நடந்த கொடூரம்!

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்றனர் ஆனால் நீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டார்.மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாயமான சம்பவம் 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட ரமேஷை தீவிரமாகத் தேடி வந்தனர்.

investigation

உறவினரது வீட்டிற்கு வந்து காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.