காதலை துண்டித்த டியூஷன் மிஸ் - 17 வயது சிறுவன் ஆன்லைன் ஆர்டர் மூலம் செய்த டார்ச்சர்!
பெண்ணிற்கு 'கேஷ் ஆன் டெலிவரி' அனுப்பி சிறுவன் டார்ச்சர் செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆன்லைன் ஆர்டர்
சென்னை பெரிய மேட்டை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த டியூஷனுக்கு அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுவன் படித்து வந்துள்ளான்.
அப்போது இருவருகிடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோருக்கு விஷயம் தெரிய வரவே அந்த பெண் காதலை தொடர மறுத்து சிறுவனை விட்டு விலகி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன், கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு இரண்டு நாட்களில் அமேசான், ஃபிலிப்கார்ட், ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்து கேஷ் ஆன் டெலிவரி போட்டு அனுப்பி டார்ச்சர் செய்திருக்கிறர்.
சிறுவன் டார்ச்சர்
அதுமட்டுமல்லாமல், 77 முறை ஓலா மற்றும் ஊபரில் வாகனகளை புக் செய்து பெண்ணின் வீட்டுக்கு அனுப்பியும் உள்ளார். இதனால் கடும் தொந்தரவை அனுபவித்த அந்த பெண்ணின் வீட்டார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதில், தனது மகளின் தொலைபேசி எண்ணிற்க்கு அடிக்கடி ஒருவர் கால் செய்து தொந்தரவு செய்வதாகவும், மகளின் பெயரில் அனுமதியின்றி ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து அனுப்பி வைத்து தொந்தரவு செய்வதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போலீசார் அந்த இ-மெயில்,தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 செல்போன்கள் வைஃபை ரூட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றினர்.