ஆன்லைனில் ஆர்டர் செய்த அனிதா...பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி - இப்படியும் நடக்குதா?
அனிதா சம்பத் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக கிடைத்த பொருள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் ஆர்டர்
இந்த காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தேவையான பொருட்களை வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திகொள்ளும் பலர் புதுசு புதுசா ஏமாற்றுவதோடு..பண மோசடி செய்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்திருக்கிறது.
அந்த வகையில்,நடிகையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பிரபலமடைந்த அனிதா சம்பத்திற்கும் இது போல நடந்திருக்கிறது. இந்த நிலையில், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தோடு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பார்சலில் அதிர்ச்சி
அந்த வீடியோவில், தான் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் அமேசானில் ஆர்டர் போட்டு இருந்தேன். கடந்த ஜூன் 13ஆம் தேதி அந்த பொருள் எனக்கு டெலிவரி ஆகிவிட்டது. அந்த பொருளின் விலை 899 ரூபாய். அந்த நேரத்தில் எனக்கு பல டெலிவரி வந்து இருந்தது.
நானும் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் இந்த பாக்ஸை பிரிக்கவில்லை. இன்று இந்த பாக்ஸை பிரித்துப் பார்க்கிறேன் உள்ளே அழுக்கு பிடித்து மிகுந்த துர்நாற்றத்தோடு ரேஷன் கடை புடவையை விட மோசமான நிலையில் ஒரு புடவை இருக்கிறது. இதற்கு எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.
ஏனென்றால் ரிட்டன் செய்ய வேண்டிய நாள் முடிந்துவிட்டது. நான் இப்போதுதான் இந்த பாக்ஸை ஓபன் செய்து பார்த்தேன். இதற்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து எனக்கு பதில் சொல்ல வேண்டும். நான் இதற்கு என்ன செய்யலாம் என்று ரசிகர்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.