சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை - பின்னால் அடக்க முடியாமல் சிரித்த நபர் வைரல்!
அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டு கவன் ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்.
அண்ணாமலை
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து
6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டிருக்கும் போது,
பின்னால் நின்ற ஒருவர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதனை ஜூம் செய்து பார்த்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். செய்தியாளர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சாட்டையால் எட்டு முறை அண்ணமலை அடித்து கொண்டார்.
சிரித்த நபர்
தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் அவரை கட்டி அணைத்துக் கொண்டு இனிமேல் அடித்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அண்ணாமலை தன்னை சாட்டையால் தானே அடித்துக் கொண்டிருக்கும் போது
பின்னால் நின்ற ஒருவர் சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அண்ணாமலைக்கு பின்னால் பதாகைகளை தாங்கி நின்று கொண்டிருந்த பாஜகவினர் வெற்றிவேல் வீரவேல் என கூறினர். அதில் கருப்பு வேட்டி சட்டை அணிந்திருந்த நபர் ஒருவர்
சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாததால் வாயை மூடிய அவர் பின்னர் ஒருவாராக சமாளித்து வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டார். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.