பாலியல் தொழில் இளைஞர்கள்; போன் மூலம் உல்லாசத்திற்கு அழைப்பு..பதறிய பெண் - ஷாக் சம்பவம்!
செல்போனில் வாடிக்கையாளர்களிடம் பேசி விபசாரத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
உல்லாசத்திற்கு அழைப்பு..
பெங்களூருவில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து விபசாரம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர்,
உல்லாசமாக இருக்க அவர் வசம் இளைஞர்கள் இருப்பதாகவும் வேண்டும் என்றால் முன்பதிவு செய்து பயன்பெற்று கொள்ளுமாறும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண், உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பதறிய பெண்
அதில், ஆனந்த் சர்மா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு விபசார தொழில் செய்தது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல், கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதை தொடர்ந்து, அவரிடம் இருந்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.