தனிமையில் உல்லாசம்; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம் - தலைமறைவான காதலன்!

Crime Pudukkottai Erode
By Swetha Jul 03, 2024 06:09 AM GMT
Report

இன்ஸ்டாவில் பழகியவருடன் கல்லூரி மாணவி கர்ப்பமானது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

கல்லுரி மாணவி

ஈரோடு அருகே உள்ள லக்காபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரின் மகளுக்கு 21 வயதாகிறது. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். கடந்த  3 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிக்கு

தனிமையில் உல்லாசம்; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம் - தலைமறைவான காதலன்! | College Girl Got Pregnant By Instagram Boyfriend

புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது ஹர்ஷத் (23) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்கள் கடக்க இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி பழகி வந்துள்ளனர். இதையடுத்து, ஒரு கட்டத்தில் அதுவே காதலாக மாறியது. எனவே இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

அதன்படி புதுக்கோட்டையில் இருந்து முகமது ஹர்ஷத் பெருந்துறைக்கு வந்து காதலியை சந்தித்துள்ளார். அதை தொடர்ந்து, அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அதன்விளைவாக மாணவி 3 மாத கர்ப்பமானார். அதன்பின்னர்தான் மாணவிக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

கள்ள காதலனுடன் தனிமையில் உல்லாசம் - பார்த்த 5 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய்!

கள்ள காதலனுடன் தனிமையில் உல்லாசம் - பார்த்த 5 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய்!

நேர்ந்த விபரீதம் 

இது குறித்து தயங்கி தயங்கி பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் உடனே புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்று முகமது ஹர்ஷத்தையும், அவருடைய பெற்றோரையும் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

தனிமையில் உல்லாசம்; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம் - தலைமறைவான காதலன்! | College Girl Got Pregnant By Instagram Boyfriend

அப்போது முகமது ஹர்ஷத்தின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என உறுதியளித்தார். இதனால் மாணவியின் பெற்றோர் நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள். ஆனால் சொன்னபடி அவர்கள் திருமணத்துக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் தட்டிக்கழித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் முகமது ஹர்ஷத் மற்றும் அவருடைய தந்தை வக்கீம் சல்மான், தாய் பீவிஜான்,

சித்தப்பா கபூர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த புதுக்கோட்டைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.