கள்ள காதலனுடன் தனிமையில் உல்லாசம் - பார்த்த 5 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது மகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
தாய் உல்லாசம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகநாதபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து. இவருக்கு மலர்செல்வி என்ற மனைவியும், கயல்விழி (7) மற்றும் கார்த்திகா (5) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமயமுத்து துபாயில் பணிபுரிந்து வருகிறார். எனவே மனைவி மலர்செல்வி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மலர்செல்வி தனது 5 வயது மகளான கார்த்திகாவை காணவில்லை என்று பதற்றத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சிறுமியின் தாய் மலர்செல்வி போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது.
ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்த தாயை துடிக்க துடிக்க கொன்ற சிறுமி - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
மகள் கொலை
இதனால் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில், மலர் செல்விக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான பாஸ்கரன் மற்றும் தர்ம சுந்தர் ஆகியோருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து, சம்பவத்தன்று மலர்செல்வி தனது வீட்டில் கள்ளகாதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
அப்போது விளையாடி விட்டு வீட்டுக்கு சென்ற சிறுமி கார்த்திகா இதனை பார்த்து விட்டு, தனது தந்தை சமயமுத்துவிடம் கூறி விடுவதாக சொன்னதால், சிறுமியை கள்ள காதலனுடன் சேர்ந்து மிரட்டிய தாய், சிறுமியை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்துள்ளார்.
அதன் பிறகு சிறுமி காணவில்லை என்று கூறி உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தேடுவது போலவும் நாடகமாடியதுடன் புகாரும் அளித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கிணற்றில் இருந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் மலர்செல்வியின் கள்ள காதலர்களான பாஸ்கரன் (37), மற்றும் தர்மசுந்தர் (26) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.