இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபர் - பரபரப்பு சம்பவம்!

Tamil nadu Election Viluppuram
By Swetha Jul 13, 2024 04:43 AM GMT
Report

வாக்கு எண்ணும் மையத்துக்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்படுத்தியது.

நுழைந்த நபர் 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபர் - பரபரப்பு சம்பவம்! | Person Entered To Vikravandi Vote Counting Centre

அதற்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. அந்த தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

பரபரப்பு சம்பவம்

இதை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபர் - பரபரப்பு சம்பவம்! | Person Entered To Vikravandi Vote Counting Centre

இந்த நிலையில், விக்கிரவாண்டியில் போலி அடையாள அட்டையை வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் போலி அடையாள அட்டை வைத்திருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.