விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடியில் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று (10.07.2024) அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 14 ம் தேதி நடை பெற உள்ளது.
இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உட்பட மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணி முதல் மொத்தமுள்ளள 276 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கத்திக்குத்து
இந்நிலையில் T.கொசப்பாளையம் வாக்குசாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த கனிமொழி (49) என்ற பெண்ணை ஒரு நபர் கத்தியால் பெண்ணின் கழுத்தில் குத்தினார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து போலீசார் கனிமொழியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையில் கத்தியால் குத்திய ஏழுமலை(52) அந்த பெண்ணின் கணவர் என்பதும், இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று வந்த அவர் மனைவி கனிமொழியை பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். +
வேறு ஊரில் வசித்து வந்த கனிமொழி, இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த போது, வாக்குச்சாவடியில் வைத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.