எனக்கு ஒரு காதலியை தேடி தாருங்கள்..நபரின் கோரிக்கைக்கு போலீஸ் கொடுத்த ரியாக்சன்!

Delhi Viral Photos Social Media
By Swetha Jun 01, 2024 04:30 PM GMT
Report

நபர் ஒருவரின் வினோத கோரிக்கைக்கு போலீசார் அளித்த நகைச்சுவையான பதில் வைரலாகியுள்ளது.

நபரின் கோரிக்கை

உலக புகையிலை இல்லா தினத்தை முன்னிட்டு, டெல்லி போலீசார் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் புகையிலையால் ஏற்படும் தீங்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புகையிலை உங்களை கொல்வது மட்டுமின்றி,

எனக்கு ஒரு காதலியை தேடி தாருங்கள்..நபரின் கோரிக்கைக்கு போலீஸ் கொடுத்த ரியாக்சன்! | Person Aked Police To Find Him A Girlfriend

உங்களுடைய புன்னகையையும் கொல்கிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனுடன், உலக புகையிலை இல்லா தினம் மற்றும் புகையில இடம் பெற்றிருந்தன. எனினும், சிவம் பரத்வாஜ் நபர் ஒருவர் இதற்கு சம்பந்தமே இல்லாத பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவருக்கு ஒரு காதலியை தேடி பிடித்து தர வேண்டும் என கேட்டு கொண்டார்.

இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி - வாலிபர் செய்த காரியம்!

இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி - வாலிபர் செய்த காரியம்!

போலீஸ்  ரியாக்சன்

மேலும், சிங்கிள் என பதிவிடுவதற்கு பதிலாக தவறுதலாக சிக்னல் என்று பதிவிட்டு உள்ளார். இதனால் டெல்லி போலீசார் நகைச்சுவையான பதிலை அளித்துள்ளனர். அதாவது, சார். நாங்கள் காதலியை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு உதவ முடியும் (அவர் காணாமல் போனால் மட்டுமே) என பதிலளித்து இருந்தனர்.

எனக்கு ஒரு காதலியை தேடி தாருங்கள்..நபரின் கோரிக்கைக்கு போலீஸ் கொடுத்த ரியாக்சன்! | Person Aked Police To Find Him A Girlfriend

இதற்காக ஒருவரை தேடி பிடித்து எல்லாம் தர முடியாது என்று தெரிவித்தனர். அதே நேரத்தில், அந்த பதிவில், நீங்கள் சிக்னல் என்றால், நீங்கள் பச்சையாக இருங்கள். சிவப்பாக வேண்டாம் என்று கிண்டல் செய்து பதிவிட்டிருந்தனர்.