பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி - ஆனால் இதையெல்லாம் செய்யக்கூடாது!

Coimbatore Narendra Modi
By Sumathi Mar 16, 2024 03:44 AM GMT
Report

கோவையில் பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 

பிரதமர் மோடி வருகின்ற 18ம் தேதி கோவை வருகிறார். இந்த பயணத்தின் போது 3.5 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி "வாகன பேரணி" செல்ல பாஜக திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கோரினர்.

pm modi

ஆனால், கோவையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், எந்த ஒரு ரோடு ஷோ நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

திருமணம்: மனசுல வலி இருக்கு, இதை குடும்பத்திடம் சொல்லல - பிரதமர் மோடி கோரிக்கை!

திருமணம்: மனசுல வலி இருக்கு, இதை குடும்பத்திடம் சொல்லல - பிரதமர் மோடி கோரிக்கை!

பேரணிக்கு அனுமதி

இதனைத் தொடர்ந்து, காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு தரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். பேரணி நடைபெறும் பகுதியில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி - ஆனால் இதையெல்லாம் செய்யக்கூடாது! | Permit Pm Modis Motorcade In Coimbatore

இந்நிலையில், வாகன பேரணி தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கண்ணப்பன் நகர் பிரிவில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பாஜகவினர் அனுமதி கோரிய நிலையில்,

மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமனையில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.