தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம்: முதலமைச்சர் மலர் தூவி மரியாதை!
தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மரியாதை
பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியார், சமூக சீர்திருத்தத்திற்காகவும், மூட நம்பிக்கைகளை மக்களிடயே கலைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். மேலும் திராவிட கழகத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
இந்நிலையில், இவரது 49வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.