ஆளுநர் வருகை; கருப்புச் சட்டைக்கு தடை - சர்ச்சையில் பெரியார் பல்கலைக்கழகம்!
பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்து வர பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கவுள்ளார்.
இதனால், ஆளுநரைக் கண்டித்து, திராவிடர் விடுதலை கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் வருகை
இதனால், மாநகர காவல்துறையினரின் அறிவுறுத்தலின் படி, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும், கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.
கைப்பேசி எடுத்து வருவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இச்சம்பவம் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.