கனல் கண்ணனுக்கு வரும் ஆக.26 வரை நீதிமன்ற காவல்!

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Sumathi Aug 15, 2022 10:50 AM GMT
Report

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனல் கண்ணன்

இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

கனல் கண்ணனுக்கு வரும் ஆக.26 வரை நீதிமன்ற காவல்! | Periyar Statue Kanal Kannan Appears Egmore Court

இதில் பங்கேற்ற சினிமா நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் பேசுகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லடசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நீதிமன்ற காவல்

பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் (பெரியார்) சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடருக்கு அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரியில் மறைந்திருந்த போது கைது செய்துள்ளனர்.

தற்போது அவருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.