பெரியார் குறித்த போலி செய்திக்கு விளக்கம் கொடுத்து விட்டு வள்ளுவர் பற்றி பேசுங்கள்: காயத்ரி ரகுராம்

dmk stalin raguramm
By Jon Mar 01, 2021 03:50 PM GMT
Report

பெரியார் குறித்த போலி செய்திகளுக்கு விளக்கம் அளித்தபிறகு ,வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வாருங்கள் என நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். வள்ளுவருக்கு காவி சாயம் பூசி விட்டதாக திமுக உள்பட ஒரு சில திராவிட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம்தனது ட்வீட்டர் பதிவில் :வான் புகழ் வள்ளுவனுக்கு குடுமி வைத்துவிட்டார்கள் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் ஸ்டாலினே. இல்லாத யுனெஸ்கோ விருதை பெரியார் பெற்றதாக பாட திட்டத்தில் வைத்து மாணவர்கள் மத்தியில் தவறான தகவலை திணித்ததற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்.

5முறை ஆட்சியில் இருந்தபோது தமிழ் புத்தாண்டு தை முதல் நாள் தான் என வரலாற்றை திரித்து சித்தரித்த திருட்டு திராவிட கும்பல் முதலில் பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த ட்வீட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17