குளிர்காலத்தில் படுத்தும் மாதவிடாய் வலி - குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!
குளிர்காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் வலி பெரும் தொந்தரவாக இருக்கும்.
பீரியட்ஸ் வலி
பீரியட்ஸ் வலிக்கு வலி நிவாரணிகளை நீண்ட நேரம் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. எனவே வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பாருங்கள்.
குளிர்காலத்தில், கால்கள் மற்றும் முதுகு போன்ற அடிவயிற்று பகுதிகளுக்கு அதிகபட்ச வெப்பத்தை வழங்க சூடான தண்ணீர் பைகளைப் பயன்படுத்தலாம். சிறிது நேரம் வெயிலில் உட்கார முயற்சி செய்யுங்கள்.
வலி குறைக்க வழிகள்
குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள். படுக்கையிலேயே இருக்காமல் நடக்க முயற்சி செய்யுங்கள். கெமோமில் டீ, பெருஞ்சீரகம், இஞ்சி டீ போன்றவற்றை குடிப்பது நல்லது. நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இவற்றைக் குடிக்கலாம். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது அடி வயிறு வலியை குறைக்க பெரிதும் உதவுகிறது.
உடல் பயிற்சி செய்தால், மகிழ்ச்சிகுரிய எண்டோர்பின் வெளியிடும். இல்லையென்றால் யோகா செய்யலாம். முதுகு, கழுத்து மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் இலேசாக மென்மையான மசாஜ் செய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், சோடா போன்றவற்றை சாப்பிடுவதை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது.