Friday, Apr 4, 2025

மாதவிடாய் வயிற்று வலி காரணமாக ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சி தகவல்!

suicide stomach pain 12 year girl
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சென்னையில் மாதவிடாய் வயிற்று வலியை தாங்கமுடியாமல் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதவிடாய் வயிற்று வலி காரணமாக ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சி தகவல்! | Stomach Pain 12 Year Girl Suicide

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரி தெருவை சேர்ந்த வெங்கம்மா கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை தாய் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அண்ணனுன் தங்கையும் வீட்டில் தனியாக இருந்தனர்.

அப்போது அந்த 12 வயது தங்கை, தான் உடை மாற்றப்போவதாக கூறி, அண்ணனை வெளியில் செலல் சொல்லி கதவை அடைத்துள்ளார். உள்ளே சென்ற தங்கை இவ்வளவு நேரம் காணவில்லையே என பதறிய அண்ணன், அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது மின்விசிறியில் அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மாதவிடாய் வயிற்று வலி காரணமாக ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சி தகவல்! | Stomach Pain 12 Year Girl Suicide

விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி வயதிற்கு வந்ததாகவும், தற்போது மாதவிலக்கு நாளில் வயிற்று வலியை தாங்க இயலாமல் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.