பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் களமிறங்கும் பிரபலம் - ரசிகர்கள் ஆர்வம்!
சின்னத்திரையில் பெப்சி உமா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெப்சி உமா
90களில் டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தொகுப்பாளினி பெப்சி உமா. இவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியின் ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இவர் ஒருவர் மட்டுமே தொகுத்து வழங்கினார். இந்நிலையில், பல வருடங்களாக திரையில் தோன்றாமல் இருந்த இவர், அண்மையில் சின்னத்திரையில் சீக்கிரத்தில் வருவேன் என தெரிவித்திருந்தார்.
ரீ-எண்ட்ரி
அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. மேலும், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பட்சத்தில், இதன் மூலம் தான் பெப்சி உமா ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நிறைய காட்சிகளில் அவர் வரமாட்டார் சில நிமிட காட்சிகளில் மட்டுமே வருவார் என கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
