கார் மோதி விபத்து - கே.ஜி.எப் பட நடிகையை தாக்கிய பொது மக்கள்

Indian Actress KGF Chapter 2 Accident Raveena Tandon
By Karthikraja Jun 02, 2024 01:12 PM GMT
Report

 பிரபல நடிகையான ரவீனா டாண்டனிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவீனா டாண்டன்

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஆளவந்தான் படத்தில் நடித்தவர் நடிகை ரவீனா டாண்டன். மும்பையைச் சேர்ந்தவரான இவர், இந்தி படங்கள் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். தற்போது கே.ஜி.எப் 2 படத்தில் ராமிகா சென் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். 

கார் மோதி விபத்து - கே.ஜி.எப் பட நடிகையை தாக்கிய பொது மக்கள் | Peoples Attack On Kgf Actress Raveena Tandon

ஜூன் 1ம் தேதி இரவு, மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கார்ட்டர் சாலையில் ரவீனா டாண்டனின் கார் ஓட்டுநர், வேகமாக ஓட்டிச் சென்று சாலையை கடக்க முயன்ற மூன்று பெண்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை - தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை - தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்து

இதில் அப்பெண்கள் லேசாக காயம் அடைந்தனர். கார் டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீனா டாண்டனும் டிரைவருடன் சேர்ந்து அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் ஆக்ரோஷமடைந்து நடிகை ரவீனா டாண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. சிலர் அதனை வீடியோ எடுக்கவும் முயன்றனர். அந்த வீடியோவில் ''ப்ளீஸ் தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்" என அங்கிருந்தவர்களிடம் கெஞ்சுகிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.