செப்டம்பர் மாதம் தியேட்டரில் கேஜிஎஃப் 2 வெளியீடு! தேதி தள்ளிப்போனதால் ரசிகர்கள் சோகம்!
கொரோனா மூன்றாவது அலை வரவில்லையென்றால், ‘கேஜிஎஃப் 2’திரைப்படம் செப்டம்பர் மாதம் தியேட்டரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பை சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, படம் வெளியாக இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில், ’கேஜிஎஃப் 2’வெளியீட்டுத் தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாகவும், கொரோனா மூன்றாவது அலை வராவிட்டால் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி திரைப்படம் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமைக்காக அமேசான் ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு மேலும் இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவை : அமைச்சர் அறிவிப்பு IBC Tamil