அது மட்டும் வேண்டாம்.. ஒரே ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் இதுதான் நடக்கும்!
திருமணமாக போகும் அன்பர்கள் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா என்பது குறித்து பார்க்கலாம்.
பொருத்தம்
பொதுவாக திருமண பொருத்தத்தில் நட்சத்திரபொருத்தத்தை பொறுத்தவரை 12 பொருத்தங்களை பார்த்து சரியாக வந்தால் திருமணம் செய்து வைப்போம். இவ்வாறு சரியான பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையிலும் கூட பிரிவு, பிரச்சினைகள் வருகிறது.
ஆனால், ஜாதகக்கட்டம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்திருந்தாலும் பிரிவு என்பது பெரும்பாலும் வந்தது இல்லை.
விளைவுகள்
இந்நிலையில், ஒரே ராசிக்காரர்கள் நிச்சயமாக திருமணம் செய்யலாம். இதில் வருத்தப்படுவதற்கோ, தயக்கம் கொள்வதற்கோ எந்த விஷயமும் இல்லை. ஆனால் இதில் இருவருக்குமான நட்சத்திரபொருத்தம் மிக முக்கியமானது. திருமணமாகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது.
இதில் ஒரே ராசியாக இருந்தாலும் கண்டிப்பாக திருமணம் செய்து வைக்கக்கூடாது. அதையும் மீறி திருமணம் செய்து வைக்கும் போது, அவர்கள் வாழ்வில் தேவையில்லாத கலக்கம் உருவாகும். வாழ்க்கையில் தேவையில்லாத குழப்பங்கள் வரும், சந்தேகங்கள் வரும், இதனால் தவிர்ப்பது நல்லது.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
