பாஜகவின் அந்த தந்திரம் - மக்களே பாடம் புகட்டுவார்கள் !! திருமாவளவன் நம்பிக்கை!!
கவர்னர், IT,ED மூலம் பாஜக இல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நெருக்கடி தருவது பாஜகவின் செயல் யுக்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமா செய்தியாளர்கள் சந்திப்பு
திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகம் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் மோகன் அவர்களின் திருவருவப்படத்தை திறக்கவும் விடுதலை சிறுத்தைகளை கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்றார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது என கூறி, இதில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றார்கள் என்றும் அந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார் என்றார்.
இந்த மாநாடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று உரக்கக் கூறுவதாக அமையும் என நம்பிக்கை தெரிவித்து, 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலை உள்ளது என்ற திருமாவளவன், காங்கிரசின் செல்வாக்கு பாரத் ஜூடோ யாத்திரைக்கு பிறகு செல்வாக்கு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
பாடம் புகட்டுவார்கள்
பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடையும் என்றும் ஆட்சியில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே இந்தியா கூட்டணியின் யுக்தியாக உள்ளது என கூறி, ஒற்றை நோக்கத்தை வலியுறுத்தும் மாநாடாக தங்களுடைய மாநாடு அமையும் என்று கூறினார் திருமாவளவன்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் கவர்னர், IT - ED, சிபிஐ போன்றவற்றின் மூலம் நெருக்கடி கொடுப்பது பாஜக செயல் தந்திரமாக உள்ளது என விமர்சித்த அவர், இதற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை கற்பிப்பார்கள் என தெரிவித்தார்.