5 மாநில தேர்தல்..!! பாஜகவா..? காங்கிரஸா..? தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு!!
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில தேர்தலில் யார் ஆட்சி அமைப்பென்பது குறித்து தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியிருக்கின்றது.
5 மாநில தேர்தல்
இந்தியாவின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டிஸ்கர், தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
இதில், மிசோரமில் நவம்பர் 7 ஆம் தேதியும், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும் ராஜஸ்தானில் நவம்பர் 25 ஆகிய மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.இன்று தெலங்கானாவில் தேர்தல் நடைபெற்றுது.
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு
இந்நிலையில், தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை வரிசையாக காணலாம்.
India Today Axis My India நடத்திய கருத்துக்கணிப்பில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் 40 முதல் 50 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பாஜக 36 முதல் 46 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், மற்றவை 1 முதல் 5 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் 90 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
TV 9 Bharatvarsh நடத்திய கருத்துக்கணிப்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகளில் பாஜக 106 முதல் 116 தொகுதிகளையும், காங்கிரஸ் 111 முதல் 121 தொகுதிகளையும் கைப்பற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல, ராஜஸ்தானிலுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் 90 முதல் 100 தொகுதிகளையும், பாஜக 100 முதல் 110 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், Jan Ki Baat 5 மாநிலத்திற்கும் முடிவுகளை விரைவாக வெளியிட்டுள்ளது. அதில், 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் 40 முதல் 55 தொகுதிகளையும், காங்கிரஸ் 48 முதல் 64 தொகுதிகளையும், பாஜக 7முதல் 13 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் 4 முதல் 7 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் பாஜக 100 முதல் 123 தொகுதிகளையும், காங்கிரஸ் 102 முதல் 125 தொகுதிகளையும், மற்றவை 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 62 முதல் 85, பாஜக 100 முதல் 122, மற்றவை 14 முதல் 15 இடங்களை பிடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 42 முதல் 53, பாஜக 34 முதல் 45, மற்றவை 3 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 தொகுதிகளை கொண்ட மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14, காங்கிரஸ் 5 முதல் 9, பாஜக 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.