திமுக அரசு சொன்ன வாக்குறுதி; பணம் கொடுக்காததாலும் இதுதான் நிலைமை - பிரேமலதா விஜயகாந்த்!

M K Stalin Tamil nadu DMK Premalatha Vijayakanth
By Vidhya Senthil Jan 19, 2025 08:30 AM GMT
Report

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பை மக்களே புறக்கணித்து போல வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000, அதைதொடர்ந்து 2021-ல் ரொக்கமாக ரூ.2,500, பின்னர் 2022, 2023-ம் ஆண்டுகளில் தலா ரூ.1000 சேர்த்து வழங்கப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த்

இவ்வாறு கடந்த ஆண்டுகளில் ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டால், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய 3 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டு, ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை.

பொங்கல் பரிசு தொகுப்பு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

பொங்கல் பரிசு தொகுப்பு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

பிரேமலதா 

இதனால் மொத்தமாக 2.21 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் மட்டுமே வாங்கியுள்ளனர். மீதமுள்ள 33 லட்சம் பேர் வாங்கவில்லை. மேலும் கொடுக்கப்பட்ட அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும்,

pongal gift

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பை மக்களே புறக்கணித்துள்ளனர். இதுவே அரசின் மீதான மக்களின் அதிருப்தியை காட்டுகிறது. இதைப்போலவே வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.