இன்பநிதியின் நண்பர்களுக்காக எழுந்து நின்றேனா? மேடையில் நடந்தது இதுதான் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

Udhayanidhi Stalin DMK Madurai Jallikattu
By Vidhya Senthil Jan 17, 2025 05:17 AM GMT
Report

இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையிலிருந்து மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்றதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி  உள்ளது.

 ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 545 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Alanganallur Jallikattu 2025

இந்த போட்டியைக் காண துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்ப நிதி மற்றும் அவரது நண்பர்கள் வருகை தந்தனர்.அப்போது இன்ப நிதியின் நண்பர்களுக்காகத் தனது இருக்கையிலிருந்து மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்றதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை அவமதிப்பதா? உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி

மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை அவமதிப்பதா? உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி

இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,’’ மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்ப நிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக,

சர்ச்சை

நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர்  சங்கீதா அவர்களை, மேடையிலிருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.

Alanganallur Jallikattu 2025

அதில் துணை முதல்வர் இருக்கையிலிருந்து எழுந்து நிற்கும்போது விதிகளின் படியே மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நானும் எழுந்து நின்றேன். மாறாக சமூக வலைத்தளங்களில் திரித்து சொல்லப்படுகிறதென்று அவர் தெரிவித்துள்ளார்.