Saturday, May 24, 2025

குடிநீரில் கழிவுநீர் கலப்பு? 30 பேருக்கு உடல்நலக்குறைவு.. 3 பேர் பலி - அமைச்சர் விளக்கம்!

Tamil nadu Chennai Death
By Swetha 6 months ago
Report

கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கழிவுநீர் கலப்பு..

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்பட்டுள்ளது. அதை அறியாமல் அந்த தண்ணீரை குடித்து வந்த பொதுமக்களுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு? 30 பேருக்கு உடல்நலக்குறைவு.. 3 பேர் பலி - அமைச்சர் விளக்கம்! | People Who Drank Contaminated Water Died 30 Sick

ஏறத்தாழ 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி, மோகனரங்கன் ஆகிய முவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

தன்னையே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர், அழுதுகொண்டே சென்ற நபர் - இதுதான் காரணம்!

தன்னையே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர், அழுதுகொண்டே சென்ற நபர் - இதுதான் காரணம்!

அமைச்சர் 

இந்த பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், “சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு? 30 பேருக்கு உடல்நலக்குறைவு.. 3 பேர் பலி - அமைச்சர் விளக்கம்! | People Who Drank Contaminated Water Died 30 Sick

குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 23 பேருக்குதான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன் அவர்கள் மீன் சாப்பிட்டுள்ளார்கள். உணவுப்பொருள் கலப்படம் நிகழ்ந்ததாலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். உடல்நல கோளாறுக்கான சரியான காரணம் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்” என த.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.