திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி- சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த சோகம்!

Tamil nadu Madurai Biriyani
By Swetha Sep 13, 2024 11:00 AM GMT
Report

பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

சிக்கன் பிரியாணி

மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி- சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த சோகம்! | People Who Ate Biryani At Dmk Program Got Sick

கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு டோக்கன் அடிப்படையில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசையாக பிரியாணி சாப்பிட்ட சிறுவன், கடித்தது சிக்கன் இல்ல பூரான் - அட்மிட் ஆன சோகம்!

ஆசையாக பிரியாணி சாப்பிட்ட சிறுவன், கடித்தது சிக்கன் இல்ல பூரான் - அட்மிட் ஆன சோகம்!

நேர்ந்த சோகம்

29 பேர் விருதுநகரிலும், 30-க்கும் மேற்பட்டோர் கள்ளிக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 82 பேர் வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி- சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த சோகம்! | People Who Ate Biryani At Dmk Program Got Sick

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கபட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.