ரேஷன் ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள் - என்ன நடந்தது?
பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கடை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட காந்தி நகர் என்ற பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சந்திரமோகன் என்பவர் சேல்ஸ் மேனாக வேலைபார்த்து வருகிறார். காலை 9 மணிக்கே இங்கு வந்து பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். ஆனால் கடை ஊழியர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை, இதனால் மக்கள் கடுப்பில் இருந்தனர்.
பின்னர், அவர் 3 மணிநேரத்திற்கு பின்னர், 12 மணிக்கு வந்ந்துள்ளார். அப்போழுது கடை ஊழியரான சந்திரமோகன் ரேஷன் கடைக்குள் நுழையும்வரை காத்திருந்து பின்னர், அவர் உள்ளே சென்றதும் கதவை பூட்டினர்.
மக்கள் அதிரடி
இந்நிலையில், கடை ஊழியரான சந்திரமோகன் உடன் பொதுமக்கள் ஜன்னல் வழியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் படுத்தினார். பிறகு, பொதுமக்கள், "ரேஷன் பொருட்களை எங்களுக்கு சரியாக விநியோகம் செய்வது கிடையாது.
அரிசி, பருப்பு, இப்படி எல்லாவற்றையும் வெளிநபர்களுக்கு விற்றுவிடுகிறார்கள். இருக்கும் பொருட்களையும், எங்களுக்கு முறையாக தருவதில்லை. கடையையும் நேரத்திற்கு திறப்பதில்லை" என்று புகாரளித்தனர்.
இந்த புகாரைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் அளிக்கும்படி அறிவுறுத்திவிட்டு, கடைக்குள் இருந்த ஊழியரை மீட்டெடுத்துவிட்டு போலீசார் அங்கிருந்த சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.