ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் புகார்..!
rameswaram
rationshop
rice provide
By Anupriyamkumaresan
ராமேஸ்வரம் ரேஷன் கடைகளில் கெட்டுப்போன அரிசி வழங்கப்படுவதாக எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள 2 மற்றும் 4-ம் எண் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசிகள் தரமற்றதாகவும், கெட்டுப்போனதாகவும் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அப்பகுதியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் வருகை புரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அரிசியை காட்டி தரமற்றதாக உள்ளதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து உயரதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. உடனடியாக அரிசியை மாற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்.