குளிக்க, பல்துலக்க சிறுநீர்.. சாணம் தான் சன்ஸ்க்ரீம் - முண்டாரி மக்கள் பற்றி தெரியுமா?

Africa Sudan World
By Jiyath Apr 02, 2024 05:20 AM GMT
Report

தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த முண்டாரி பழங்குடியின மக்கள் பற்றிய தகவல். 

பழங்குடியின மக்கள் 

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் முண்டாரி எனப்படும் பழங்குடியின மக்கள் வாழ்நது வருகின்றனர். இவர்கள் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்கும், சூரிய வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாக்க, சாணத்தை சன் ஸ்கிரீமாகவும் பயன்படுத்துகின்றனர்.

குளிக்க, பல்துலக்க சிறுநீர்.. சாணம் தான் சன்ஸ்க்ரீம் - முண்டாரி மக்கள் பற்றி தெரியுமா? | People Using Cow Urine To Bath Dung As Sunscreen

அந்த நாட்டில் அன்கோல் வதுசி என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் முண்டாரி பழங்குடியின மக்களிடமே அதிகளவில் உள்ளது. இந்த மாடுகள் 8 அடி உயரம் வரை வளரக்கூடியவை. மேலும், இந்திய மதிப்பில் ரூ. 41,000 விலை மதிப்பு உடையவை. 

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் - திருமணம் செய்துகொண்ட ராணுவ வீரர்!

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் - திருமணம் செய்துகொண்ட ராணுவ வீரர்!

வரதட்சணை 

இதனை அவர்கள் மிகப்பெரும் சொத்தாக மட்டுமின்றி தங்களுடைய கௌரவ சின்னமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த பசுக்களை பாதுகாப்பதற்காக பழங்குடியின மக்கள் இயந்திர துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இந்த மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கும், வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

குளிக்க, பல்துலக்க சிறுநீர்.. சாணம் தான் சன்ஸ்க்ரீம் - முண்டாரி மக்கள் பற்றி தெரியுமா? | People Using Cow Urine To Bath Dung As Sunscreen

இந்த பசுக்களின் சிறுநீரில் உள்ள அம்மோனியா முண்டாரி பழங்குடியின மக்களின் தலை முடியை ஆரஞ்சு நிறமாக மாற்றியுள்ளது. மேலும், திருமணங்களின் போது வரதட்சணை பொருளாக இந்த அன்கோல் வதுசி இன மாடுகள் வழங்கப்படுகின்றன.