எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் எதிர்ப்பு.. கற்களை வீசி விரட்டிய மக்கள் - பரபரப்பு!
பழனிச்சாமியை எதிர்த்து மக்கள் கற்களை வீசி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவர் ஜெயந்தி
பசும்பொன் தேவரின் திருநாளில் குருபூஜை நடைபெற்றது. அவரது நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று காலை மதுரையிலிருந்து காரில் புறப்பட்டார். அங்கு செல்லும் வழியில் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் அவரது காரை சிலர் வழிமறித்து, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி அங்கிருந்து பழனிசாமியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
மக்கள் எதிர்ப்பு
இந்நிலையில், பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு வரிசையில் நின்றபோது இளைஞர்கள் சிலர் "எடப்பாடி ஒழிக, சசிகலாவுக்கு துரோகம் செய்த இபிஎஸ்வெளியேறு" என கூச்சலிட்டனர். அப்பொழுது பழனிச்சாமியுடன் வந்த அமைச்சர்களுக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த போலீஸார் நினைவிடக் கேட்டைப் பூட்டி, கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர், அவர் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, வெளியே செல்லும்போது,
பசும்பொன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒருவர் கற்களை வீசினார். இதையறிந்த போலீஸார் அந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.