இளைஞர்களின் கட்டை விரலை வெட்டி வீசி.. தேவர் ஜெயந்தியில் சீமான்!
தேவர் ஜெயந்தியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டுள்ளார்.
சீமான்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது.
தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம். எனவே, ‘பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற இந்த சாதிய பாகுபாடு கூடவே கூடாது’ என்று போதித்த சமத்துவ நாயகர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தோன்றிய திருநாள் இன்று.
அடிமை வாழ்வினைவிட விடுதலைச்சாவு மேலானது; விடுதலை அல்லது வீரமரணம் என முடிவெடுத்து, தம் இளம் வயதிலேயே களம் கண்ட மானத்தமிழர். கைரேகை சட்டத்தைப்போட்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நம்முடைய விடுதலை வேட்கையைத் தணித்துவிடலாம் என்று எண்ணியபோது, அந்தக் கைரேகை சட்டத்தை எதிர்த்துப்போராடி தகர்த்த புரட்சியாளர்.
அறிக்கை
இதனை தொடர்ந்து, அதில், "தினமும் காலையிலும், மாலையிலும் கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், உழைக்கும் மக்கள், திருமணமானவர்களெல்லாம் சென்று கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கட்டைவிரலை வெட்டி வீசினார்கள் என்றால்,
தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் புகழ் வணக்கம்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 30, 2023
உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம். எனவே, ‘பிறப்பின் அடிப்படையில் பேதம்… pic.twitter.com/DL0a2m3DXQ
ஐயாவின் வார்த்தையே வாழ்க்கை என்று வாழ்ந்த அத்தகைய மானமறவர்களை தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன் நம்முடைய ஐயா தெய்வத்திருமகனார் அவர்கள்.
தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ -ஆயுதமோ இல்லை என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்" என்று கூறியுள்ளார்.