சாலைகளில் பைக் ஸ்டண்ட் - கோபத்தில் பொது மக்கள் செய்த செயல்

Karnataka Bengaluru
By Karthikraja Aug 18, 2024 09:07 AM GMT
Report

சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்த இடையூறு ஏற்படுத்தியது வாகன ஓட்டிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பைக் ஸ்டண்ட்

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இளைஞர்கள் பைக் வைத்து சாலைகளில் ஸ்டண்ட் செய்வது தினமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால் வண்டியை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பார்கள். நாட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரமான பெங்களூரிலும் வாகன ஓட்டிகள் இந்த இடையூறுகளை அனுபவிக்கின்றனர். 

bike stunt

இந்நிலையில் 8 இளைஞர்கள் 4 இரு சக்கர வாகனங்களில் பெங்களூர் சிட்டியில் இருந்து போக்குவரத்து நெரிசல் அதிகம் புறநகர் பகுதியான நீலமங்கலாவுக்கு சென்றுள்ளனர். அங்கு வாகனங்களை அஜாக்கிரதையாக ஓட்டி ஸ்டன்ட்களில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். இவர்களின் செயல்களால் மற்ற வாகன ஓட்டிகள் ஆத்திரமடைந்தனர். 

ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை; தனியார் நிறுவனங்களுக்கும் அமலுக்கு வரும் சட்டம்

ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை; தனியார் நிறுவனங்களுக்கும் அமலுக்கு வரும் சட்டம்

30 அடி உயர பாலம்

ஸ்டன்டில் ஈடுபட்டிருந்த வாகனம் அங்கு வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகளும், மக்களும் இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அதில் இருந்த 2 பைக்குகளை, 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே போட்டனர். பைக் ஸ்டன்டில் ஈடுபட்ட இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 

இந்தக் காட்சிகளை அங்கிருந்த மக்கள் சிலர் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரவியதையடுத்து, நீலமங்கலா போக்குவரத்து போலீஸ் பைக் ஸ்டன்டில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக் ரைடர்களின் ஸ்டன்ட் பிரச்னை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.