ஸ்டாலின், அன்புமணியை விட விஜய்க்கு வலுக்கும் ஆதரவு - போஸ்டர்களால் பரபரப்பு!
வாரிசு அரசியலுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம்
உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட செய்து சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதனிடையே வாரிசு பட ரிலீஸ் விவகாரத்தில் உதயநிதிக்கும் நடிகர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் வெளியிடுவதிலும் திரையரங்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் தற்போது ரசிகர்மன்றத்தினரை சந்தித்து அவ்வப்போது ஆலோசனை நடத்திவருகிறார். மதுரையில் விஜயின் ரசிகர்கள் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில்,
அரசியலில்..
திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் என வாரிசுகளின் படங்களை அச்சிட்டு "எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
ஈழப் போரில் புகைப்படங்கள்... பாடங்களை புகட்டும் புலிகளின் புகைப்படங்கள்... உலகப் புகைப்பட நாள்... IBC Tamil