தளபதி விஜயால் அமைச்சர் உதயநிதிக்கு வரப்போகும் பெரும் சிக்கல் : எச்சரிக்கும் சவுக்கு

Ajith Kumar Udhayanidhi Stalin Vijay Varisu Thunivu
By Irumporai Dec 16, 2022 06:58 AM GMT
Report

வாரிசு திரைப்படம், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இரண்டு சிங்கிள்களான 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' ஆகிய பாடல்களும் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் தற்போது வரை இருந்து வருகின்றது.

பொங்கலுக்கு மோதும் விஜய் அஜித்

அதே போல், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகிறது. திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் மற்றும் அனிருத் பாடியுள்ள Chilla  Chilla பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குனர் H வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் அஜித். 

விஜயால் உதயநிதிக்கு சிக்கல்

இந்த நிலையில் துணிவுபடத்தின் திரையிடும் உரிமையினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது ஆகவே அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சுவுக்கு சங்கர் ஒரு பிரபல சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் ரெட்ஜெயண்ட் மூவிஸ் துணிவு படத்தினை வெளியிடும் உரிமையினை பெற்றுள்ளதால் சிக்கல் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது விஜய் தனது மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்துள்ளதால் உதயநிதிக்கு பெரும் சிக்கல் உண்டாகியுள்ளதாக கூறியுள்ளார்சவுக்கு சங்கர்.