ரஜினி வயதானவர்..இளமையாக நடித்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள் - சபாநாயகர் அப்பாவு!

Rajinikanth Tamil nadu M. Appavu Tirunelveli
By Swetha Aug 28, 2024 02:58 AM GMT
Report

அரசியலுக்கு வயது தடை இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது.

ரஜினி வயதானவர்..இளமையாக நடித்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள் - சபாநாயகர் அப்பாவு! | People Only Accept Rajini Acting Young Says Appavu

மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை.

இந்தியாவிலே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!

இந்தியாவிலே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!

 ரஜினி வயதானவர்..

இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது.

ரஜினி வயதானவர்..இளமையாக நடித்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள் - சபாநாயகர் அப்பாவு! | People Only Accept Rajini Acting Young Says Appavu

இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. இதனால் நாங்கள் அதை எதிர்க்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் வயதானவர் என்றாலும் இளமையாக நடித்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும். வயதாக வயதாக பழுத்த பழம்போல் கலைஞர் போன்று அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும். அரசியலுக்கு வயது தடை இல்லை. என்று தெரிவித்துள்ளார்.