மக்களே தப்பித்து ஓடுங்கள் – இஸ்ரேல் ராணுவம் முக்கிய அறிவுறுத்தல்..!

Israel Palestine Israel-Hamas War
By Thahir Oct 10, 2023 09:28 AM GMT
Report

காசாவில் உள்ள இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக எகிப்துக்கு தப்பிச் செல்லுங்கள் என இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் – காசா போர்  

கடந்த சனிக்கிழமை ( அக்டோபர் 7 ) இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது.

People flee - Israeli army advises

இஸ்ரேல் தனது படைகள் மூலம் காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

மக்களே தப்பித்து ஓடுங்கள் 

மேலும் இஸ்ரேல் – காசா எல்லையை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

People flee - Israeli army advises

காசாவில் குண்டு மழை பொழியும் என்பதால் அங்குள்ள இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக எகிப்துக் தப்பிச் செல்ல இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ராஃபா வழியாக எகிப்துக்கு தப்பிச் செல்ல இஸ்ரேல் ராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஹெக்ட் அறிவுறுத்தி உள்ளார்.