கல்லூரி பெண்களிடம் இளைஞர் பாலியல் சில்மிஷம்..ஒன்றுக்கூடி பொதுமக்கள் செய்த சம்பவம்!
கல்லூரி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இளைஞரை மக்கள் தாக்கி மிரட்டியுள்ளனர்.
பாலியல் சில்மிஷம்
கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில், பயணிகள் பேருந்துக்காக நின்றுகொண்டு இருந்தனர். அப்போது, சுமார் 25 வயதான இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில்,
அங்கிருந்த கல்லூரி பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போதையில் இருந்த அந்த இளைஞரை அருகில் இருந்த பேக்கரி கடை ஊழியர்கள் தட்டி கேட்டபோது
அவர்களையும் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளால் அந்த இளைஞர் திட்டியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இளைஞரை தட்டி கேட்டுள்ளனர்.
பொதுமக்கள்
அந்த சமயத்திலும் அந்த நபர் விடாமல் ஆபாச வார்த்தைகளால் பேசியதால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இரும்பு பைப் மூலம் சரமாரியாக தாக்கி மிரட்டி அங்கிருந்து துரத்தி அடித்ததாக கூறப்படுகிறது.
பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், சில்மிஷத்தில் ஈடுப்பட்ட
அந்த போதை இளைஞரின் அடையாளாம் அறியப்படாத சூழலில், தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து வருவதற்குள் தப்பி ஓடிவிட்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.