19 நாட்கள்; திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

Madurai Tirupparankunram Murugan Temple
By Sumathi Dec 22, 2025 08:33 AM GMT
Report

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

thiruparankundram

தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.நேற்று இரவு 8.30 மணியளவில் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து

மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தரப்பட்டது.

மக்களுக்கு அனுமதி

ஆதார் அட்டை, செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார். கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? முழு விவரம் இதோ

எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? முழு விவரம் இதோ

மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.