உயிரை காப்பாற்றிய முதியவர் - வருஷம்தோறும் தவறாமல் தேடி வரும் பென்குயின்!
உயிரைக் காத்த முதியவரைத் தேடி ஒரு பென்குயின் ஆண்டுதோறும் வருகிறதென்றால் நம்ப முடிகிறதா... அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.
பென்குயின்
பிரேசில், ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்தவர் ஜோவோ பெரீரா டி சோஸா(71). கொத்தனார் வேலை பார்த்தவர். அதன் பின் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்துள்ளார். அதன்படி, ஒரு நாள் ணல்வெளியில் ஏதோ ஒன்று கிடப்பதைப் பார்த்தார். அருகில் சென்று பார்த்ததில் குட்டி பென்குயின் என்பது தெரிந்தது.
உடனே அதனை கையில் தூக்கியுள்ளார். வீட்டுக்கு பென்குயினைக் கொண்டு வந்து அதற்கு சிகிச்சை அளித்தார். அது சாப்பிடுவதற்கு சின்னச் சின்ன மீன்களைக் கொடுத்தார். 2 நாட்களில் பென்குயின் முழுக்க குணமடைந்தது. அதன்பின் அதனை மறுபடி கடற்கரையிலேயே சென்று விட்டுள்ளார்.
பாசப் போராட்டம்
ஆனால், அது அவர் பின்னாலேயே வந்துகொண்டிருந்தது. தொடர்ந்து, 11 மாதங்கள் அவருடனேயே இருந்தது. டி சோஸாவுடன் இருந்த நாள்களில் அவருடைய பேரனுக்கும் அதனுடன் நெருக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் மதிய நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே போன பென்குயின் வீடு திரும்பவேயில்லை.
அதன்பின், அடுத்த ஆண்டு ஜூன் மாதம். காலையில் கண்விழித்து எழுந்து கதவைத் திறந்துகொண்டு, பின்புறத்தில் கூண்டிலிருக்கும் பறவைகளுக்குத் தீனி வைக்கப்போனபோது அங்கு பென்குயின் இருந்துள்ளது. அந்த வருடம் முடிந்து அடுத்த பிப்ரவரி மாதம்தான் கிளம்பிப்போகியுள்ளது.
அதனையடுத்து, ருடம்தோறும் அவரைத் தேடி வந்துகொண்டேயிருந்துள்ளது. எனக்கு அந்த பென்குயின் சொந்தக் குழந்தை மாதிரி. அதுவும் என்னை மனதார விரும்பும் என்றுதான் நினைக்கிறேன் என டி சோஸா தெரிவித்துள்ளார்.