கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

M Karunanidhi Tamil nadu Chennai
By Sumathi Dec 16, 2022 08:20 AM GMT
Report

நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னம்

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளை பாதுகாக்கப்பட்ட கடலோர பகுதியாக அறிவித்து கடந்த 2016ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு | Pen Memorial To Karunanidhi Case

இந்த பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்பதால்,

தடை?

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் 42 மீட்டர் உயர பேனாவுடன் கூடிய நினைவிடம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு, மனுவுக்கு 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்தது.