மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பெருமை சேர்க்க நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம்..!

M Karunanidhi Government of Tamil Nadu DMK
By Nandhini Jul 22, 2022 10:44 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில், மெரினா கடலில் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி

ஆற்றல்மிக்க அரசியல் தலைவரும், சிறந்த எழுத்தாளர், கவிஞர், நாடகம் மற்றும் திரைப்பட வசனகர்த்தா, பத்திரிகையாளர், சிறந்த பேச்சாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

1957-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி அடைந்தவர். வயது மூப்பு காரணமாக கலைஞர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். இவருடைய உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

M. Karunanidhi

பேனா சின்னம்

இந்நிலையில், கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில், மெரினா கடலில் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்திருக்கிறது. கருணாநிதியின் எழுத்தாற்றலை என்றென்றும் போற்றும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.