கடல் நடுவில் பேனா சின்னம் - பொதுமக்களிடம் கருத்து கேட்பு!
கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
பேனா நினைவுச் சின்னம்
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்குள்ளே பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க
மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது. இந்த அறிக்கையை விரிவாக
கருத்துக் கேட்பு
4 ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில்,
இது தொடர்பாக வரும் ஜனவரி 31ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.