தேறாது என தூக்கி வீச நினைத்த கோழி.. கின்னஸ் உலக சாதனை பெற்ற சுவாரசிய கதை!
கோழி ஒன்று கின்னஸ் ரெகார்ட் பெற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கின்னஸ் ரெகார்ட்
அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த தம்பதியினர், பண்ணை ஒன்று வைத்து வந்துள்ளனர். அதில் கோழிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை வளர்த்து வருகின்றனர். இதில், பீனட் என்ற கோழி, அதிக நாட்கள் உயிர் வாழும் கோழி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. பொதுவாக ஒரு கோழியின் ஆயுட்காலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும், ஆனால் இந்த கோழி கோழியின் வயது 20 ஆண்டுகள் 272 நாட்களை எட்டியது.
இந்த கோழியை வளர்த்தவர் மார்சி பார்க்கர் டார்வின், ஒரு நேர்காணலில் இந்தியாக கோழி குறித்த தகவலை கூறினார். அதில், "பீனட் கோழி ஆரோக்கியமான கோழி, அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது, ஆனால் அந்த கோழி பிறந்த போது எப்படி இருந்ததோ தற்போது அப்படி குஞ்சு பொரிப்பதற்கு முன்பே பீனட்டின் தாய் இறந்துவிட்டது" என்றார்.
பீனட்டின் கதை
இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "இது அழுகிய முட்டை என்று நான் நினைத்தேன். எனவே அந்த முட்டையை குளத்தில் வீச முற்பட்டபோது உள்ளே இருந்து சத்தம் கேட்டது. நான் மெதுவாக முட்டை ஓட்டை தோலுரித்தேன், அப்போது மிகவும் குட்டியாக இருந்த பீனட்டை பார்த்தே. எனது தாயிடம் அதை கொடுக்க முயன்றேன். ஆனால் என் அம்மா அதை ஏற்க மறுத்துவிட்டார்.
எனவே நான் சின்னஞ்சிறிய கோழிக்குஞ்சை வளர்க்க முடிவு செய்தேன். மிகவும் சிறியதாக இருந்ததால் அதற்கு பீனட் (வேர்க்கடலை) என்று பெயரிட்டேன். 21 வயதான பீனட் கோழி நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற மற்ற விலங்குகளுடன் ஒரே அறையில் வாழ்கிறது.
விலங்குகள் தாங்கள் ஒன்றாக இருக்க நேரத்தை செலவிட விரும்புகின்றன, கோழி வெளியில் இருக்க மறுக்கிறது. என வீட்டிற்குள் வந்து என்னுடன் சிறிது நேரம் செலவழிக்கிறது, சில சமயங்களில் பீனட் கோழி என்னுடன் அமர்ந்து டிவி பார்க்கும்" என்று கூறினார்.