பாஜக துணை தலைவர் பண்ணை வீட்டில் விபச்சாரம் - சிறுமிகள் மீட்பு!
மேகாலயா பாஜக துணைத் தலைவருக்குச் சொந்தமான ரிசார்ட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக வந்த புகாரில் விடுதியில் நடைபெற்ற சோதனையில் 6 சிறுவர், சிறுமிகளை மீட்ட போலீசார், 73 பேரை கைது செய்துள்ளனர்.
பெர்னார்ட் மராக்
பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் பெர்னார்ட் மராக், இவருக்கு சொந்தமாக மேகாலய மாநிலம் துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்ட்டில் நேற்று போலீசார் அதிடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அந்த விடுதி விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சிறுவர், சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர். அப்போது சிறுவர்கள், சிறுமிகள் உடல் நிலை பாதிக்கப்பட்ட பேச கூட முடியாமல் சுகாதாரமற்ற அறையில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
விபச்சாரம்
இதனையடுத்து 6 சிறுவர், சிறுமிகளை மீட்ட போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 73 பேரை கைது செய்து, விடுதியில் இருந்து 36 வாகனங்கள் 400க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த சோதனையில், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அறைகளில் இருந்து பல கருத்தடை சாதனங்களும் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த பண்ணை வீட்டில் 30 சிறிய அறைகள் இருப்பதும் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்த சோதனையடுத்து தலைமைறைவாக உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் பெர்னார்ட் மரக் உடனடியாக சரணடையும் படி போலீசார் கேட்டுகொண்டுள்ளார். ஆனால் தான் எங்கும் தப்பியோடவில்லை என்றும், போலீசார் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் பெர்னார்ட் மரக் தெரிவித்து உள்ளார்.
மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அரசியல் பழிவாங்கல் காரணமாகவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் பெர்னார்ட் மரக் சாடியுள்ளார். இவர் மீது ஏற்கனவே 25 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவிக்கிறது.
பாஜக மாநில துணை தலைவர் மீது விபச்சார விடுதி நடத்தியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.