2023: அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பெண் உரிமை போராளி - யார் தெரியுமா?

Iran
By Vinothini Oct 07, 2023 06:48 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெண் உரிமை போராளி வென்றுள்ளார்.

நோபல் பரிசு

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஒவ்வொருத் துறைகளுக்கும் தினமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கபட்டது.

peace-nobel-prize-winner-nargis-muhammadi

தற்பொழுது அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டின் பெண் உரிமைகள் போராளி நர்கீஸ் முஹம்மதிக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல், சமூக விடுதலை உள்ளிட்டவற்றிற்காக போராடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தட்டி தூக்கிய தனித்துவமான எழுத்தாளர்!

2023 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தட்டி தூக்கிய தனித்துவமான எழுத்தாளர்!

கைது

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஈரான் நாட்டில் நிகழ்ந்த பெண்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் கொல்லப்பட்டார். இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டம் நடைபெற்றது இதில் நர்கீஸ் கலந்துகொண்டார்.

peace-nobel-prize-winner-nargis-muhammadi

இதனால் அந்நாட்டு அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவரது கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உலக நாடுகள் உடனடியாக அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தியது.