BCCI மீது சரியான கோபத்தில் ப்ரீத்தி ஜிந்தா... பாதி வீரர்கள் எங்கே? சிக்கலில் பஞ்சாப் அணி!
பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
ப்ரீத்தி ஜிந்தா
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக இருக்கும் இந்த தொடரில் தற்போது யார் கடைசி மூன்று இடங்களை பிடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் ராஜஸ்தான் முதல் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டுமானால் எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது குறைந்தபட்சம் வெற்றி பெற வேண்டும்.அதே நேரத்தில், பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது.
கடைசி இரண்டு போட்டிகள் சம்பிரதாய ஆட்டமாக இருந்தாலும் அந்த அணிக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முறை ஐபிஎல் தொடங்கும் போது ஒவ்வொரு அணியும் பிசிசிஐயிடம் ஒரு உத்திரவாதம் கேட்டார்கள்.
பஞ்சாப் அணி
அதாவது, டி20 உலக கோப்பை விரைவில் தொடங்கவுள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் முன்கூட்டியே ஐபிஎல் அணிகளை விட்டு செல்லக்கூடாது என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு பிசிசிஐ, அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றும் அனைத்து வீரர்களும் இருப்பார்கள் என்று உறுதியளித்தனர்.
ஆனால், டி20 உலக கோப்பை தொடங்க கிட்ட தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்று விட்டார்கள். இந்நிலையில், பஞ்சாப் அணியில் உள்ள ஐந்து வெளிநாட்டு வீரர்கள் வருகின்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
பஞ்சாப் அணியின் தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா, இங்கிலாந்து வீரர்கள் சாம் கரன், ஜானி பாரிஸ்டோ, லியாம் லிவிங் ஸ்டோன், கிரிஸ் ஒக்ஸ் ஆகியோர் மே 19ம் தேதி விளையாட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர். அதேபோல இந்திய வீரர் ஷிகர் தவானும் காயம் காரணமாக விளையாடவில்லை.
இதன் காரணமாக பஞ்சாப் அணியில் பாதி வீரர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் எஞ்சிய வீரர்களை வைத்து விளையாடக்கூடிய நிலைக்கு பஞ்சாப் தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் பஞ்சாப் அணி உரிமையாளர்கள் ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்னனர்.