பேடிஎம் மீதான தடை; மார்ச் 15 வரை தான்.. கெடு விதித்த ரிசர்வ் வங்கி!

India Reserve Bank of India paytm
By Sumathi Feb 17, 2024 03:43 AM GMT
Report

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவையை நிறுத்துவதற்கான கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் வங்கி சேவை

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் வங்கி சேவை சார்ந்த செயல்பாட்டுக்கு கடந்த மாதம் ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்தது.

reserve bank of india

தொடர்ந்து, பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை முறையின் கீழ் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் செல்ல டிக்கெட் புக் பண்றீங்களா? இதோ அசத்தல் ஆஃபர்!

அயோத்தி ராமர் கோவில் செல்ல டிக்கெட் புக் பண்றீங்களா? இதோ அசத்தல் ஆஃபர்!

கெடு நீட்டிப்பு

இந்த தடை காரணமாக வாடிக்கையாளர் கணக்கு, வாலட், FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப் போன்ற கிரெடிட் சேவை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், தங்கள் வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு, ப்ரீபெய்ட் வாலட், FASTag போன்றவற்றில் உள்ள இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியும்.

paytm

  இந்நிலையில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கான கெடு தேதியை வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.