இனி சில்லறை தேடவேண்டாம் - தமிழக பேருந்துகளில் அசத்தல் வசதி!
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் கருவி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டிஜிட்டல் முறை
பெருநகர போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்படவுள்ளன. இரண்டு வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நடத்துனரிடம் இருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை. அல்லது, கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துவது போலவே பயணிகள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தலாம்.
பேருந்தில் வசதி
இந்த அமைப்பின் கீழ், பயணிகள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் QR ஸ்கேனர்கள் நிறுவப்படும். மேலும் பயணிகள் QR குறியீடுகளை பேருந்து நடத்துனர்கள் மற்றும் ரயில் டிக்கெட் பரிசோதகர்களிடம் ஆதாரமாகக் காட்டலாம்.
9 ஆயிரம் பேருந்துகளில் இந்த சேவை கொண்டு வரப்பட உள்ளது. 20 ஆயிரம் மெஷின்கள் இதற்காக வாங்கப்பட உள்ளது. மொத்தம் 40 லட்சம் பேர் தினசரி இந்த சேவையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. முதல் கட்டமாக 3 நகரங்களில் கொண்டு வந்துவிட்டு
அதன்பின் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். சென்னையில், அனைத்து பேருந்துகளிலும் இந்த கேஷ் லெஸ் வசதி கொண்டு வரப்படவுள்ளது.